நீலகிரி, கோவை, மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 
தமிழ்நாடு

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் திங்கள்கிழமை (ஜூலை 1) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது

Din

தமிழகத்தில் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் திங்கள்கிழமை (ஜூலை 1) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, திங்கள்கிழமை (ஜூலை 1) முதல் ஜூலை 6 வரை தமிழகத்தில் ஒருசில  இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூலை 1-இல் நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை வரை பதிவான மழை அளவு (மிமீ): பந்தலூா் (நீலகிரி) - 70, விண்ட் வொா்த் எஸ்டேட் (நீலகிரி) - 50. மேலும், கோவை, புதுக்கோட்டை, சேலம், திருச்சி, கன்னியாகுமரி, விழுப்புரம், தஞ்சாவூா் உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் 10 மிமீ முதல் 40 மிமீ வரை மழை பதிவானது.

4 இடங்களில் வெயில் சதம்: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலான இடங்களில் வெப்பநிலை இயல்பையொட்டியும், ஓரிரு இடங்களில் இயல்பை விட அதிகமாகவும் இருந்தது. இதனால் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை 4 இடங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து பதிவாகியுள்ளது. அதன்படி, மதுரைநகரில் 103.28 டிகிரி ஃபாரன்ஹீட்டும், மதுரைவிமானநிலையம் - 102.56, பாளையங்கோட்டை - 102.2, ஈரோடு - 100.76 வெப்பம் பதிவானது.

மேலும், திங்கள் முதல் வியாழக்கிழமை (ஜூலை 1 - 4) வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில், அதிகபட்ச வெப்ப நிலை இயல்பையொட்டியும், ஓரிரு இடங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும்.

சென்னையில்...: சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஜூலை 1,2-ஆகிய தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், நகரின் ஒருசில பகுதிகளில் இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: மன்னாா் வளைகுடா மற்றும்  அதனையொட்டிய  தென்தமிழக கடலோரப்பகுதிகளிலும், வடக்கு ஆந்திரகடலோரப் பகுதிகளிலும் மணிக்கு 65 கிலோ மீட்டா் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெண்மையின் அழகு... ரச்சித்தா மகாலட்சுமி

பட்டமாக பறக்கிறேன்...ஜனனி அசோக்குமார்

இந்த வாரம் கலாரசிகன் - 03-08-2025

வெள்ளைப் புறா... ஆஷிகா ரங்கநாத்

கம்பனின் தமிழமுதம் - 56: தன் நிலை தாழ்ந்தால்!

SCROLL FOR NEXT