முகப்பு
கோப்புப்படம்
தமிழ்நாடு

திமுக - விசிக இடையே 2-ம் கட்ட பேச்சுவார்த்தை!

திமுக மற்றும் விசிக கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாக நாளை (மார்ச். 2) 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு

திமுக - விசிக இடையே 2-ம் கட்ட பேச்சுவார்த்தை!

திமுக மற்றும் விசிக கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாக நாளை (மார்ச். 2) 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

Updated On : 1 மார்ச், 2024 at 10:42 AM
கோப்புப்படம்
பகிர்:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் டி.ஆா்.பாலு தலைமையிலான திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழு முதல்கட்ட பேச்சுவாா்த்தை நடத்தியது.

அதில், திமுக பேச்சுவாா்த்தைக் குழுவிடம் 3 தனித் தொகுதிகள், ஒரு பொதுத் தொகுதி என நான்கு தொகுதிகளை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கேட்டிருந்தனர்.

இந்த நிலையில் மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக தி.மு.க - விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் இடையே 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெறவுள்ளது.

விசிகவை பொருத்தவரை, ஏற்கெனவே சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமாரும் உறுப்பினா்களாக உள்ளனா். இதில் ரவிக்குமாா் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்றார். இந்தத் தோ்தலில், விசிகவின் பானை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது.

காஞ்சிபுரம், சிதம்பரம், திருவள்ளூா், விழுப்புரம் ஆகிய 4 தனித் தொகுதிகள், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூா் ஆகிய பொதுத் தொகுதிகள் அடங்கிய பட்டியல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் அளிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →