திமுக - விடுதலைச் சிறுத்தைகள் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக - விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக - விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திங்கள்கிழமை நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் விசிக தலைவர் திருமாவளவன், பொதுச்செயலர் ரவிக்கோர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
கடந்தமுறை 6 தொகுதிகளில் போட்டியிட்ட விசிக இம்முறை இரட்டை இலக்க தொகுதிகளை கேட்டுப் பெற உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பேச்சுவார்த்தையின்போது கடந்த தேர்தலில் வெற்றிபெற்ற 4 தொகுதிகள் உள்பட 20 தொகுதிகளின் பட்டியலை விசிக வழங்கவுள்ளது.
Advertisement
Advertisement
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு என கட்சிகளின் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஏற்கெனவே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்ட திமுக, கூட்டணியில் உள்ள இரண்டு கட்சிகளுக்கு தொகுதிகளையும் ஒதுக்கிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.