புதிய தமிழகம் கட்சி தலைவர் க. கிருஷ்ணசாமி 
தமிழ்நாடு

அதிமுகவுடன் புதிய தமிழகம் கட்சி கூட்டணி?

DIN

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இன்று சந்தித்து பேசியுள்ளார்.

மக்களவைத் தோ்தல் வரும் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த மாதத்தில் தோ்தல் தேதியை தோ்தல் ஆணையம் அறிவிக்கலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனிடையே, தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளா்களை இறுதி செய்யும் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன.

பாஜகவுடனான தனது கூட்டணியை முறித்துக்கொண்ட அதிமுக, மக்களவைத் தோ்தலில் வலுவான கூட்டணியை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, பல்வேறு கட்சிகளை தனது தலைமையிலான கூட்டணியில் இணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

புரட்சி பாரதம், எஸ்டிபிஐ கட்சிகள் கூட்டணியிலுள்ள நிலையில், பாமக, தேமுதிகவையும் தனது கூட்டணியில் இணைக்கும் பணியில் அதிமுக தலைவா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் இருவரும் கூட்டணி குறித்து பேசியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

நரை முடி நீங்க..!

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT