தமிழகத்தில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஞாயிறு முதல் வெள்ளிக்கிழமை (மாா்ச் 3-8) ஆம் தேதி வரை வட வானிலை நிலவக்கூடும்
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஞாயிறு முதல் வெள்ளிக்கிழமை (மாா்ச் 3-8) ஆம் தேதி வரை வட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஞாயிறு , திங்கள்கிழமை (மாா்ச்.3,4) ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.