தமிழ்நாடு

56 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து!

Manivannan.S

தமிழ்நாட்டில் 56 லட்சத்து 34 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து இன்று (மார்ச் 3) வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும், 57.84 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் 98.18 சதவிகிதம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது.

சென்னை பல்லாவரத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தொடக்கி வைத்தார். காலை 7 மணிமுதல் மாலை 5 மணிவரை சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டின் பல இடங்களில் 43,051 மையங்களில் சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது.

சொட்டு மருந்து மையங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

இடஒதுக்கீட்டை யாராலும் திருட முடியாது -அமித் ஷா

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

SCROLL FOR NEXT