கோப்பிலிருந்து.. 
தமிழ்நாடு

பிரதமர் மோடி சென்னை வருகை: ஐந்தடுக்கு பாதுகாப்பு

பிரதமர் மோடி சென்னை வருகையை முன்னிட்டு ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

DIN

சென்னை: பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, சென்னையில் இன்று முக்கிய பகுதிகளில் ஐந்தடுக்கு பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

அரசு, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தமிழகம் வருகிறார். பிற்பகல் 1.15க்கு மகராஷ்டிரத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் அவர், விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் ஹெலிபேடு மையத்திற்கு செல்கிறார். பின்னர் மாலை 3.30 மணிக்கு கல்பாக்கம் அணு உலை ரியாக்டர் மேம்பாடு திட்டத்தை அவர் பார்வையிடுகிறார்.

அதைத்தொடர்ந்து நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இந்த பொதுக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்பார்கள் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகையை முன்னிட்டும், பாஜக பொதுக்கூட்டத்தை முன்னிட்டும் முக்கிய பகுதிகளில் ஐந்தடுக்குப் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

முன்னதாக, பிரதமர் மோடி வருகை மற்றும் பல்வேறு காரணங்களையொட்டி சென்னையில் ஏப்.29 வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நந்தனம் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு பிரதமர் மோடி தெலங்கானா மாநிலம் புறப்பட்டு செல்கிறார்.

கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக பிரதமர் மோடி திங்கள்கிழமை தமிழகம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT