தமிழ்நாடு

மத்திய அரசின் புதிய சாதனை: எய்ம்ஸ் கட்டுமானம் குறித்து சு. வெங்கடேசன்

தேர்தல் நேரத்தில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டிருப்பதாக சு. வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார்.

DIN

தேர்தல் நேரத்தில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை மத்திய அரசு தொடங்கியிருப்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கருத்து வெளியிட்டுள்ளார்.

மதுரையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த 2019ஆம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டிய நிலையில், ஐந்து ஆண்டுகளுக்குப் பின் தற்போதுதான் கட்டுமானப் பணிகள் தொடங்கியிருக்கின்றன.

தேர்தல் நேரத்தில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் அவசர அவசரமாக தொடங்கப்பட்டுள்ளதாக மதுரை எம்.பி. சு. வெங்கடேசன், அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது குறித்து சு. வெங்கடேசன் எம்.பி. தனது கருத்துகளை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஒரு ரகசிய திட்டத்தைப் போல மதுரை எய்ம்ஸின் கட்டுமானப்பணி இன்று துவக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் பிரதமர் மதுரைக்கு வந்தார். அப்பொழுது அவரை வைத்து துவக்கி இருக்கலாம்.

அடிக்கல் நாட்டு விழாவுக்கும் திட்டத்தின் துவக்க நிகழ்வுக்கும் இடையே 5 ஆண்டு என்ற புதிய சாதனையை தேசம் அறிந்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமபரிவாரங்கள் சேர்த்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

SCROLL FOR NEXT