தமிழ்நாடு

பிரதமர் இப்படியா பொய் சொல்வது? முதல்வர் ஸ்டாலின்

DIN

சென்னை: சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி, மாநில அரசுக்குத் தராமல் மக்களுக்கு நேரடியாக நிதி வழங்கி வருவதாக அப்பட்டமான ஒரு பொய்யைச் சொல்லி விட்டுச் சென்றுள்ளார் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

நீங்கள் நலமா திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு குறித்து கடுமையான விமரிசனத்தை முன்வைத்தார்.

சில நாட்களுக்கு முன்னால் சென்னைக்கு வந்து பேசிய பிரதமர் மோடி, மாநில அரசுக்குத் தராமல் மக்களுக்கு நேரடியாக நிதி வழங்கி வருவதாக அப்பட்டமான ஒரு பொய்யைச் சொல்லி விட்டுச் சென்றுள்ளார்கள். எந்த மக்களுக்குக் கொடுத்தார் என்பதைச் சொல்லி இருந்தால் அந்த மக்களுக்குக் கிடைத்ததா என்று கேட்கலாம்.

இரண்டு மாபெரும் இயற்கை பேரிடரை எட்டு மாவட்டத்து மக்கள் சந்தித்தார்கள். இதற்காக 37 ஆயிரம் கோடி ரூபாய் நிதி கேட்டோம். அதற்கு 1 ரூபாயையாவது ஒதுக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு உதவி செய்தாரா பிரதமர்? இப்படியா பொய்களைச் சொல்வது?

மத்திய அரசிடம் இருந்து நிதி வரவில்லை என்றாலும் இந்த எட்டு மாவட்டத்துக்கு மக்களுக்காக, மாநிலப் பேரிடர் நிதி மற்றும் அரசுத் துறைகளில் இருந்து 3406.77 கோடி ரூபாய் அளவுக்கு நிதி வழங்கியும், நிவாரணப் பணிகளைச் செய்தும் மக்கள் நலம் காத்து வரும் அரசுதான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அரசு என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடியாத்தி! சம்யுக்தா மேனன்..

ராஜஸ்தான் பேட்டிங்; வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே!

ஜப்பானில் 6ஜி: மின்னல் வேகத்தில் தரவு பரிமாற்றம்!

போட்டிக்குப் பிறகு ரசிகர்கள் காத்திருங்கள்... சிஎஸ்கே அணி நிர்வாகம் பதிவு!

என்னை கைது செய்த பின் ஆம் ஆத்மியில் ஒற்றுமை அதிகரித்துள்ளது -கேஜரிவால்

SCROLL FOR NEXT