‘வெறி பிடித்தவர்கள்..’ கார்த்திக் சுப்புராஜ் வேதனை!
புதுச்சேரியில் சிறுமி கொல்லப்பட்ட சம்பவத்தைக் குறிப்பிட்டு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வேதனையாக பதிவிட்டுள்ளார்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் மாயமான பள்ளி மாணவி ஆர்த்தி அங்குள்ள கால்வாயில் செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
அவரது மரணத்துக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள், உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். தொடர்ந்து, சிறுமியைக் கொன்றதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம், பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியதால் பல தரப்புகளிலிருந்தும் குற்றவாளிகளைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், சமூக வலைதளங்களில் ஒன்றான எக்ஸ் தளத்தில், ‘ஜஸ்டிஸ் ஃபார் ஆர்த்தி’ என்கிற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது.
Advertisement
Advertisement
நடிகர் கமல்ஹாசன் இச்சம்பவத்தைக் கண்டித்து பதிவிட்டிருந்தார். தற்போது, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ”என்ன ஒரு கொடூரமான மனிதாபமற்ற வெறி பிடித்தவர்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.