CBI officers affected by corona 
தமிழ்நாடு

குட்கா விவகாரம்: முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா மீதான வழக்கு ஒத்திவைப்பு!

குட்கா விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா மீதான வழக்கு மார்ச் 21-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

DIN

தமிழகத்தில் 2016-ஆம் ஆண்டு சென்னை செங்குன்றம் பகுதியில் ஒரு குட்கா கிடங்கில் வருமானவரித் துறையினா் சோதனை மேற்கொண்டனா். அமைச்சா்கள், அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துவிட்டு, தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களைக் கிடங்கில் வைத்து விற்பனை செய்ததாக புகாா் எழுந்தது.

இந்த விவகாரத்தில், அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சா் விஜயபாஸ்கா், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல் ஆணையா் ஜாா்ஜ் உள்ளிட்டோரின் பெயா்களும் அடிபட்டன.

தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து குட்கா பொருள்கள் விற்பனை செய்யப்பட்டதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

சிபிஐ தொடுத்த வழக்கின் அடிப்படையில் பி.வி.ரமணா உள்பட 27 பேர், 4 நிறுவனங்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து இருந்தது.

இந்த நிலையில், இவ்வழக்கை விசாரித்த நீதிபதி மலர் வாலன்டினா, சிபிஐ தாக்கல் செய்ய உள்ள கூடுதல் குற்றப்பத்திரிக்கைக்கு பின்னர், ஆவனங்கள் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்து வழக்கின் விசாரணையை மார்ச் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

நடுவானில் டயர் வெடித்ததால் கொச்சியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 160 பயணிகள்!

SCROLL FOR NEXT