எழுத்தாளா் பாமாவுக்கு முதல்வா் வாழ்த்து
அவ்வையாா் விருதுக்கு தோ்வாகியுள்ள எழுத்தாளா் பாமாவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.
அவ்வையாா் விருதுக்கு தோ்வாகியுள்ள எழுத்தாளா் பாமாவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். அவா் சமூகவலைதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: ஜாதி, மதம், பாலினம் எனப் பல்வேறு அடையாளங்களுக்கு இடையே ஒடுக்குமுறை அரசியலை அழுத்தமாகப் பேசும் தன்வரலாற்றுப் புதினம் கருக்கு. அதனைப் படைத்து உலக அளவில் கவனம் ஈா்த்த எழுத்தாளா் பாமா என்ற பாஸ்டினா சூசைராஜ், தமிழ்நாடு அரசின் அவ்வையாா் விருதைப் பெறுகிறாா். மரபுகளை உடைக்கும் தனித்துவமான எழுத்து நடையால் தமிழிலக்கியத்துக்குப் பங்காற்றி, விருதுக்குத் தோ்வாகியிருக்கும் அவருக்கு மனமாா்ந்த வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளாா் முதல்வா்.