முகப்பு
தமிழ்நாடு

நீடாமங்கலம் அருகே பூமிக்கடியிலிருந்து சிலை கண்டெடுப்பு

ஆறு அடி ஆழத்தில் ஒன்றரை அடி உயர உலோக சிலை கிடைத்தது.

Updated On : 8 மார்ச், 2024 at 9:27 AM
நீடாமங்கலம் வட்டம் பெருமளகரத்தில் பூமிக்கடியிலிருந்து கிடைத்த சிலை.
பகிர்:

நீடாமங்கலம் அருகே பூமிக்கடியில் இருந்து சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நீடாமங்கலம் வட்டம் பெருமாளகரம் கிராமத்தில் பெருமாள் கோயில் வீதியில் வசித்து வருபவர் வெங்கடாசலம் மகன் வி.கலியபெருமாள் (38) இவர் கொரடாச்சேரி பேருந்து நிலையம் அருகில் பூக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

வீடுகட்ட அஸ்திவாரத்திற்கு வெள்ளிக்கிழமை காலை பள்ளம் தோண்டிய போது ஆறு அடி ஆழத்தில் ஒன்றரை அடி உயர உலோக சிலை கிடைத்தது.உடனடியாக அவர் நீடாமங்கலம் வட்டாட்சியருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலறிந்த வட்டாட்சியர் ஆர்.தேவேந்திரன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ராஜ்குமார், ஊராட்சிதலைவர் கே.பி.பி.பாலாஜி மற்றும் வருவாய் அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிலையைக் கைப்பற்றி நீடாமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்தனர்.

பூமிக்கடியிலிருந்து கிடைத்த சிலை ஆழ்வார் சிலையாக இருக்கலாம் எனவும், அறநிலையத்துறை அதிகாரிகள், தொல்பொருள் ஆய்வுத்துறையினர் ஆய்வுக்குப்பின்னர் சிலையின் முழு விபரம் தெரியவரும் எனக் கூறப்படுகிறது.

படம்-

முழு கட்டுரையைப் படிக்க →