முகப்பு
விஜயராகவன்
தமிழ்நாடு

‘மை வி3 ஆட்ஸ் ’ உரிமையாளர் சிறையில் அடைப்பு!

செல்போனில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் வருமானம் பார்க்கலாம் என மோசடி செய்ததாக மைவி3 ஏட்ஸ் என்ற நிறுவன உரிமையாளர் சிறையில் அடைப்பு.

தமிழ்நாடு

‘மை வி3 ஆட்ஸ் ’ உரிமையாளர் சிறையில் அடைப்பு!

செல்போனில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் வருமானம் பார்க்கலாம் என மோசடி செய்ததாக மைவி3 ஏட்ஸ் என்ற நிறுவன உரிமையாளர் சிறையில் அடைப்பு.

Updated On : 8 மார்ச், 2024 at 6:06 AM
விஜயராகவன்
பகிர்:

செல்போனில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் வருமானம் பார்க்கலாம் என ஆசைக்காட்டி மோசடி செய்ததாகவும், மருத்துவர்கள் பரிந்துரையின்றி மாத்திரைகளை விற்பனை செய்ததாகவும் மைவி3 ஏட்ஸ் என்ற நிறுவனத்தின் மீது, அண்மையில் கோவை மாநகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து கடந்த 29 ஆம் தேதியன்று அந்த நிறுவனத்திற்கு ஆதரவாகவும், பொய் புகார் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நீலாம்பூர் பகுதியில் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரையை சேர்ந்தவர் விஜயராகவன் (48). இவர் வி3 ஆன்லைன் டிவி, மைவி3 ஆட்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை தொடங்கி பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக குற்றசாட்டு எழுந்தது. தற்போதைய மைவி3 ஆட்ஸ் உரிமையாளர் கோவை வெள்ளக்கிணறு பகுதியை சேர்ந்த சக்தி ஆனந்தன் (43) என்பவர் மீதும் மோசடி குற்றசாட்டு எழுந்தது.

தமிழ்நாடு, ஆந்திர உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களிடம் போலி வாக்குறுதி அளித்து சுமார் ₹20 ஆயிரம் கோடி வரை இவர்கள் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் போலி டாக்டர் பட்டம் பெற்று அதன் மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரின்பேரில் மதுரையில் தங்கியிருந்த விஜயராகவனை கைது செய்த காவல்துறையினர் அவரை கோவை சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து இவர் அதிக ரத்த அழுத்தம், நீரழிவு நோய் பாதிப்பின் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். 3 நாள் சிகிச்சைக்குப் பின், இவர் நேற்று மீண்டும் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

காவல்துறையினர் விஜயராகவனிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →