கோப்புப் படம்.
கோப்புப் படம். 
தமிழ்நாடு

அதிமுக, பாஜக இரு கட்சிகளும் கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருந்தன: பிரேமலதா விஜயகாந்த்

DIN

அதிமுக, பாஜக இரு கட்சிகளும் கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருந்தன என்று தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அதிமுக அலுவலகத்துக்கு எங்களது பேச்சுவார்த்தை குழுவினர் மரியாதை நிமித்தமாகவே சென்று வந்தார்கள். அதிமுகவிடம் மாநிலங்களவை சீட் கேட்டுள்ளோம். தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடரும். பாஜகவுடன் திரை மறைவு பேச்சுவார்த்தை என ஒன்றுமில்லை.

அதிமுக, பாஜக இரு கட்சிகளும் கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருந்தன. மாநிலங்களவை சீட் தர அதிமுக மறுத்ததாக வெளியான தகவல் உறுதிப்படுத்தப்படாதது. அனைத்து கட்சிகளுக்கும் மாநிலங்களவை உறுப்பினர்கள் இருப்பதால் எங்கள் கட்சிக்கும் கேட்கிறோம். மாநிலங்களவை சீட் வேண்டும் என்பதில் தேமுதிக உறுதியாக உள்ளது.

எங்கள் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளோம். வெகு விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிப்போம் என்றார். மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக மற்றும் தேமுதிக இடையே 2 ஆம் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தை மார்ச். 6ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT