தமிழ்நாடு

மதுரை எய்ம்ஸ் போல் சின்னப்பிள்ளைக்கு வீடும் வரவில்லை: அமைச்சர் உதயநிதி

DIN

மதுரைக்கு எய்ம்ஸ் வராதது போல, சின்னப்பிள்ளைக்கு மத்திய அரசின் வீடும் வரவில்லை என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், இந்திய ஒன்றியத்திலேயே முதன் முறையாக, முத்தமிழறிஞர் கலைஞர் தொடங்கிய மகளிர் சுய உதவிக்குழுவில் இணைந்து, கிராமப்புற மகளிரின் பொருளாதார மேம்பாட்டுக்காக தன்னையே அர்ப்பணித்த மதுரை சின்னப்பிள்ளைக்கு, வீடு வழங்கப்படும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றிய அரசு தரப்பில் வாக்குறுதி தரப்பட்டது.

மதுரைக்கு எய்ம்ஸ் வராதது போல, சின்னப்பிள்ளைக்கு ஒன்றிய அரசின் வீடும் வரவில்லை. 2 ஆண்டு கால காத்திருப்புக்குப் பின், இதுகுறித்த வேதனையை சின்னப்பிள்ளை வெளிப்படுத்தியிருந்தார்.

இதையறிந்த நம்முடைய முதல்வர், சின்னப்பிள்ளைக்கு தமிழ் நாடு அரசு சார்பில் ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் புதிய வீடும், 380 சதுர அடி நிலத்திற்கான பட்டாவும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

'மகளிர் மேம்பாடு' எனும் கலைஞரின் கனவை நனவாக்க உழைத்த சின்னப்பிள்ளைக்கு, 'கலைஞரின் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் வீடு கிடைக்கவுள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறோம். அவருக்கு என் அன்பும், வாழ்த்தும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுகை மாநகரில் 24 மணி நேரமும் மது விற்பனை

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை பவன் கேரா

அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தா் வேல்ராஜ் பணியிடைநீக்கம் ரத்து: ஆளுநா் உத்தரவு

ஜிஎஸ்டி 2.0: ஒரு மைல்கல் சீரமைப்பு

முகநூல் பக்கத்தில் பிரச்னையை தூண்டும் விதமாக விடியோ: 2 போ் கைது

SCROLL FOR NEXT