தமிழ்நாடு

பைக்கில் வந்து கூலித் தொழிலாளியைக் கொலை செய்த மர்ம நபர்!

இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் ஜெய்கணேஷை கத்தியால் குத்தியுள்ளார்.

DIN

மதுரை தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன், இவரது மகன் ஜெய்கணேஷ் 35 வயதான இவர், கோவை துடியலூர் அருகே சுப்பிரமணியம்பாளையம் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார்.

இந்தநிலையில் இன்று அதிகாலை 6 மணியளவில் காசி நஞ்சேகவுண்டன் புதூர் பகுதியில் வந்துகொண்டிருந்த போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் ஜெய்கணேஷை கத்தியால் குத்தியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த ஜெய்கணேஷ் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பரிதாபமாக பலியானார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த துடியலூர் போலீசார் ஜெய்கணேஷின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறன்றனர். அதிகாலை நடந்த இக்கொலையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

புதுச்சேரியில் நடைபெறுவது தேஜ கூட்டணி அரசுதான்: முதல்வர் ரங்கசாமி

SCROLL FOR NEXT