தமிழ்நாடு

மீண்டும் எம்.எல்.ஏ. ஆகிறாரா பொன்முடி? - அப்பாவு விளக்கம்!

மீண்டும் பொன்முடிக்கு எம்.எல்.ஏ. பதவி வழங்குவது குறித்து சட்டப்பேரவைத் அப்பாவு விளக்கமளித்துள்ளார்.

DIN

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு நெல்லையில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

முன்னாள் அமைச்சர் பொன்முடி வழக்கில் உயர் நீதிமன்றம் அவருக்கு தண்டனை விதித்தது. அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் உச்சநீதிமன்றம் தண்டனையை தடை செய்துள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி நீதிமன்றம் தண்டனை வழங்கினால் அவர்கள் பதவி நீடிக்க அனுமதி மறுக்கப்படும். அதனடிப்படையில் அவர் எம்எல்ஏ பதவியில் நீடிக்க முடியாது என நான் உத்தரவிட்டேன்.

தற்போது உச்ச நீதிமன்றம் தண்டனையை தடை செய்துள்ளதால் ஏற்கனவே ராகுல் காந்தி, அன்சாரி போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி கடைபிடிக்கப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் பொன்முடி மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

தீர்ப்பு எனது கையில் வந்துள்ளது முதன்மைச் செயலாளரிடம் இது குறித்து அறிவுறுத்தி உள்ளேன். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். விரைவில் அது குறித்து தெரிவிக்கப்படும் என்று கூறினார்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக தொடப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு உயா்நீதிமன்றம் விதித்த மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை!

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத் திட்ட உதவிகள் வழங்கினாா் எம்எல்ஏ

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

SCROLL FOR NEXT