தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ மனோகரன்!
அதிமுக முன்னாள் எம்எல்ஏ மனோகரன் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
அதிமுக முன்னாள் எம்எல்ஏ மனோகரன் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
மனோகரன், 2016ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து 2021 பேரவைத் தேர்தலிலும் அதிமுக சார்பில் அவர் களமிறங்கனார்.
ஆனால் தோல்வியை தழுவினார். இந்த நிலையில் சென்னையில் தவெக தலைவர் விஜய்யை சந்தித்து அக்கட்சியில் மனோகரன் இணைந்துள்ளார். வரவிருக்கும் பேரவைத் தேர்தலில் தவெக சார்வில் வாசுதேவநல்லூர் தொகுதியில் மனோகரன் மீண்டும் களமிறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள பிரதான கட்சிகள் தயாராகி வரும் நிலையில் மற்றொரு புறம் அரசியல் பிரபலங்கள் கட்சி மாறியும் வருகின்றனர்.
Former AIADMK MLA Manoharan joined that party in the presence of TVK leader Vijay.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.