திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு கடந்த வாரம் ஒப்பந்தம் கையெழுத்தானது.
மேலும், தொகுதிப் பங்கீடு குறித்து திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் இன்று காலை ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில், நாகை, திருப்பூர் தொகுதிகள் இந்திய கம்யூனிஸ்ட் (சிபிஐ) கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலில் போட்டியிட்ட நாகை, திருப்பூர் தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் களமிறங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.