தமிழ்நாடு

ரமலான் நோன்பு தொடக்கம்: தூத்துக்குடியில் இஸ்லாமியர் சிறப்பு தொழுகை

ரமலான் நோன்பு தொடங்கியதையடுத்து, தூத்துக்குடியில் இஸ்லாமியர் சிறப்பு தொழுகை நடத்தினர்.

DIN

தூத்துக்குடி: இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு செவ்வாய்க்கிழமை தொடங்கியதையடுத்து, தூத்துக்குடியில் உள்ள பழைமையான ஜாமியா பள்ளிவாசலில் அதிகாலையில் இஸ்லாமியர் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் முக்கியமான ஒன்று நோன்பு இருப்பது ஆகும். இந்த ரமலான் மாதத்தில் 30 நாள்கள் இஸ்லாமியர்கள் நோன்பு கடைபிடித்து, ஏழை, எளியோருக்கு தானம் செய்வர்.

இந்த புனித மாதமான ரமலான் மாதம் செவ்வாய்க்கிழமை தொடங்கியதையடுத்து, தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசலில் அதிகாலை சிறப்புத் தொழுகை இமாம் அப்துல் ஆலிம் தலைமையில் நடைபெற்றது.

இமாம் சதக்கத்துல்லாஹ் உலக நன்மைக்காக சிறப்பு துவா ஓதினார். இதில் ஜாமியா பள்ளிவாசல் தலைவர் மீராசா, செயலர் எம்.எஸ்.எப். ரகுமான், துணைத் தலைவர் சிராஜ், பொருளாளர் மூஸா, அரசு காஜி முஜிபுர் ரஹ்மான், திரேஸ்புரம் மீராசா உள்பட ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகையில் ஈடுபட்டனர். முன்னதாக நோன்பு இருப்பவர்களுக்கு சகர் உணவு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

செங்கல் சூளையை மூடக் கோரி ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT