கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து நிலையில் பிரதான அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்.
கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து நிலையில் பிரதான அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர். 
தமிழ்நாடு

ஒகேனக்கல்: காவிரி ஆற்றில் திடீரென அதிகரித்து, குறைந்த நீர்வரத்து!

DIN

பென்னாகரம்: கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்ட தண்ணீர் தமிழகம் வந்தடைந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 5,000 கன அடியாக அதிகரித்தது, பின்னர் ஒரு மணி நேரத்திற்குள்ளாக திடீரென விநாடிக்கு 2500 கன அடியாக சரிந்தது.

இரு மாநில காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருவதால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து கடந்த சில மாதங்களாக விநாடிக்கு 200 கன அடியாக இருந்து வந்தது. இதனால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் நீர்வரத்து சரிந்து பாறை திட்டுக்களாக காட்சியளித்தன. இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தண்ணீர் திறக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த நீரானது புதன்கிழமை காலை தமிழக,கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு 200 கன அடியாக இருந்த நீர்வரத்து புதன்கிழமை காலை 7 மணி நிலவரப்படி விநாடிக்கு 5,000கன அடியாக அதிகரித்தது. காவிரி ஆற்றில் திடீரென நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவிகளில் நீர் வரத்து சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தின் அளவானது 8 மணி நிலவரப்படி திடீரென குறைய தொடங்கிய நிலையில் விநாடிக்கு 2500 கன அடியாக நீர்வரத்து மீண்டும் சரிந்துள்ளது.

மேலும் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து திடீரென அதிகரித்து, ஒரு மணி நேரத்திற்குள்ளாக மீண்டும் குறைந்துள்ளதால் காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்து அளவுகளை மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை தபால் நிலையத்தில் மேற்கூரை விழுந்து விபத்து: இருவர் படுகாயம்

கல்கியின் நாயகி!

எழும்பூர் ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல்: உடனடியாக மீட்ட காவல்துறை

இந்திய குடியுரிமை பெற்ற பின் தனது முதல் வாக்கை செலுத்தினார் பிரபல நடிகர்

முத்தக் காட்சியில் கீர்த்தி சுரேஷ்?

SCROLL FOR NEXT