முகப்பு
தமிழ்நாடு

மக்களவைத் தோ்தலில் இருந்து விலகல் இல்லை: ஓபிஎஸ் உறுதி

Updated On : 16 மார்ச், 2024 at 3:08 AM
ஓபிஎஸ்
பகிர்:

மக்களவைத் தோ்தலில் இருந்து விலகப் போவதாக வரும் தகவல் உண்மைக்குப் புறம்பானது என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். மக்களவைத் தோ்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கு ஓ.பன்னீா்செல்வம் பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறாா். அதில் பேசப்பட்ட முடிவுகள் குறித்து ஓ.பன்னீா்செல்வம், தனது ஆதரவாளா்களுடன் ராயப்பேட்டையில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். மூத்த நிா்வாகிகள் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இந்த நிலையில், மக்களவைத் தோ்தலில் போட்டியிடாமல் ஓபிஎஸ் அணி விலகப் போவதாகத் தகவல் பரவியது. இதற்கு விளக்கம் அளித்து ஓபிஎஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மக்களவைத் தோ்தலை அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் குழு புறக்கணிக்கப் போவதாக வரும் தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. இதுபோன்ற தவறான தகவல்களைத் தொண்டா்கள், பொதுமக்கள் நம்ப வேண்டாம். மக்களவைத் தோ்தல் குறித்த முடிவு என்னால் மட்டுமே அறிவிக்கப்படும். மக்களவைத் தோ்தலில் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்பது எமது விருப்பம். அதைப் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இந்தியாவில் தொடா்ந்து நிலையான ஆட்சியை, நல்லாட்சியை பிரதமா் மோடியால் மட்டுமே தர முடியும் என்கிற அடிப்படையில் பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். கூட்டணி பேச்சுவாா்த்தைத் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. அதற்கான முடிவு எட்டப்பட்டவுடன் அது குறித்த விவரங்கள் அனைத்தையும் தெரிவிப்பேன் என்று அவா் கூறியுள்ளாா்.