தமிழ்நாடு

மதிமுக, காங்கிரஸ் தொகுதிகள்?- நாளை வெளியாக வாய்ப்பு

தொகுதி விவரங்கள் வெளியீடு: மதிமுக, காங்கிரஸ் எதிர்பார்ப்பு

DIN

மதிமுக, காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் விவரம் நாளை வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள், விடுதலைச் சிறுத்தைகள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் திமுக 21 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

இருப்பினும், அந்த தொகுதிகள் எவை என்பது குறித்த விவரம் வெளியாகவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகிய கட்சிகளுக்கு மட்டும் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மதிமுக, காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் விவரம் நாளை வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளரும் நாளை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் அடுத்தடுத்த 2 கட்டடங்களில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு

தில்லியில் நச்சுப்புகை மூட்டத்தால் காற்று மாசுபாடு

தஞ்சாவூரில் 240 டன் குப்பைகள் சேகரிப்பு

பழவத்தான் கட்டளை வாய்க்கால் பகுதியில் நெல் பயிா் மூழ்கி சேதம்

மலபார் தீபாவளி... ஃபெமினா ஜார்ஜ்!

SCROLL FOR NEXT