கோப்புப் படம். 
தமிழ்நாடு

பாஜக வேட்பாளர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும்: வானதி சீனிவாசன்

DIN

பாஜக வேட்பாளர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கோவையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வரும் மார்ச் 19ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். பாஜகவில் தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு இன்னும் 2-3 நாட்களி அறிவிக்கப்படும்.

பாகிஸ்தானில் இருந்தெல்லாம் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெறப்பட்டதாக வதத்ந்திகள் பரவி வருகிறது.

இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளிக்க முடியும். பாஜக அரசை அதானி, அம்பானி நடத்தி வருவதாக கூறி வந்த நிலையில், தேர்தல் பத்திரத்தில் அந்த நிறுவனங்களின் பெயர் இல்லாதது எதிர்க்கட்சிகளுக்கு ஏமாற்றம் அளித்திருக்கும்.

தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக நாங்கள் பட்டியல் கொடுக்க தயார் என மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் 3 ஆண்டு கால ஆட்சியில் எவ்வளவு வாங்கி இருக்கிறீர்கள் என சொல்ல முடியுமா. தேர்தல் பத்திரம் தொடர்பாக பாஜகவை கேள்வி கேட்கும் கட்சிகளிடம் விளக்கம் கேட்டால் பதில் இல்லை. திமுக அரசு மக்களுக்கு எதிராக உள்ளது.

சொத்துவரி, பத்திரப்பதிவு வரி உயர்வு என தாங்க முடியாத சுமையை மக்கள் மீது திமுக அரசு திணித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்பிஐ வங்கியில் வேலை: 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

திமுகவுக்கு கண்டனம், கூட்டணி அதிகாரம், தேர்தலில் போட்டி - தவெக தீர்மானங்கள்!

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

SCROLL FOR NEXT