கோப்புப்படம்
கோப்புப்படம் 
தமிழ்நாடு

அதிமுக கூட்டணியில் தேமுதிக: வேட்பாளர்கள் அறிவிப்பு!

DIN

வரும் மக்களவைத் தேர்தலில் தேமுதிக, புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது.

தேமுதிகவுக்கு 5 இடங்கள், புதிய தமிழகத்தின் கிருஷ்ணசாமிக்கு 1 தொகுதி, எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், கிருஷ்ணசாமிக்கு தென்காசி தொகுதியும், எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை ராயபேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அதிமுக வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டார்.

அதன்படி, சென்னை வடக்கில் ரா, மனோகரும், சென்னை தெற்கில் ஜெ. ஜெயவர்தனும், காஞ்சிபுரத்தில் ராஜசேகரும், அரக்கோணத்தில் ஏ.எல். விஜனும், கிருஷ்ணகிரியில் வி.ஜெயபிரகாஷும் அதிமுக சார்பில் போட்டியிடுகின்றனர்.

ஆரணியில் ஜி.வி. கஜேந்திரனும், விழுப்புரத்தில் ஜெ. பாக்யராஜும், சேலத்தில் பி. விக்னேஷும், நாமக்கலில் எஸ். தமிழ்மணியும், ஈரோட்டில் ஆற்றல் அசோக் குமாரும் போட்டியிடுகின்றனர்.

மேலும், கரூரில் தங்கவேல், சிதம்பரத்தில் சந்திரகாசன், நாகப்பட்டினத்தில் கர்சித் சங்கர், மதுரையில் சரவணன், தேனியில் நாரயணசாமி, ராமநாதபுரத்தில் ஜெயபெருமாள் போட்டியிடுகின்றனர்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

எஸ்டிபிஐ, புதிய தமிழகம் கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதிமுகவுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளதால் வரும் தேர்தலில் தங்கள் கூட்டணி அமோக வெற்றி பெறும் எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து: 8 பேர் பலி | செய்திகள்: சிலவரிகளில் | 09.05.2024

ஆர்சிபி பேட்டிங்; மேக்ஸ்வெல் அணியில் இல்லை!

24 மணி நேரத்தில் 49 லட்சம் பேர் பார்த்த ‘மோடிக்கு ராகுல் பதிலடி’ விடியோ!

கால் முளைத்த கொன்றைப் பூ! அலேக்யா ஹரிகா..

குஜராத் பர்தம்பூரில் மறுவாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT