தமிழ்நாடு

திமுக தேர்தல் வாக்குறுதிகள் வெற்றுக் காகிதம்: அண்ணாமலை

DIN

திமுகவின் போலி தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் வெறும் காகிதம் மட்டும்தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இதுகுறித்து அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, திமுக கொடுத்த 99% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக, மேடைக்கு மேடை பொய் கூறிக் கொண்டிருந்த முதல்வர் ஸ்டாலின், அதே தேர்தல் வாக்குறுதிகளை, அப்படியே மறுபடியும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கும் கொடுத்திருப்பதிலிருந்தே, எந்தத் தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பது தெரிகிறது.

திமுக தனது 2021 தேர்தல் வாக்குறுதிகளில், சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம் என்று பொய் கூறி ஏமாற்றிவிட்டு, ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்தும், அதுகுறித்து எதுவுமே பேசாமல் இருந்துவிட்டு, தற்போது நாடாளுமன்றத் தேர்தலுக்கும் அதே பொய் வாக்குறுதியைக் கொடுக்க வெட்கமாக இல்லையா?

இது போக, 100 நாள் வேலைத் திட்டம், 150 நாளாக உயர்த்தப்படும் என்ற 2021 தேர்தல் வாக்குறுதியையும் அப்படியே மீண்டும் இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கும் கொடுத்திருக்கிறது திமுக.

மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்பது உறுதி என்ற நிலையில், திமுகவின் போலி தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் வெறும் காகிதம் மட்டும்தான் என்பதை மக்கள் முழுமையாக உணர்ந்திருக்கிறார்கள். இனியும் திமுகவின் நாடகங்களை நம்ப மக்கள் தயாராக இல்லை என்று அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு முடிவுகள் வெளியீடு!

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம்: சோனியா காந்தி

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: நல்வாய்ப்பாக உயிர் தப்பிய 60 பேர்!

குருத்வாராவில் பக்தர்களுக்கு உணவு பரிமாறிய பிரதமர் மோடி!

திரைவிழாவில் மகாராஜா!

SCROLL FOR NEXT