கோப்புப்படம் 
தமிழ்நாடு

தமிழக மீனவர்கள் 32 பேர் கைது!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மீனவர்களை கைது செய்து, அவர்களின் விசைப்படகுகள் பறிமுதல்.

DIN

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழகத்தை சேர்ந்த 32 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.

நெடுந்தீவு அருகே 25 மீனவர்களும், மன்னார் அருகே 7 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களின் 5 விசைப்படகுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் யாழ்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

கடந்த வாரம் 21 மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்னதாக 35 மீனவர்களை இலங்கை படையினர் கைது செய்துள்ளனர்.

இவர்களை மீட்க தமிழக அரசு தரப்பில் மத்திய அமைச்சகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டு வரும் சூழலில், மேலும், 32 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்குரிமையை எந்த வகையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேங்காய் மதிப்பு கூட்டுதல், பொருட்கள் தயாரித்தல் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்!

ஓடிடியில் இட்லி கடை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை?

முதல் டி20: இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா பந்துவீச்சு! அணி விவரம்...

SCROLL FOR NEXT