தெலங்கானாவில் 2 மணி நேரம் பட்டாசு வெடிக்கலாம்: உச்ச நீதிமன்றம்
தெலங்கானாவில் 2 மணி நேரம் பட்டாசு வெடிக்கலாம்: உச்ச நீதிமன்றம் 
தமிழ்நாடு

ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? உச்ச நீதிமன்றம் கேள்வி

DIN

புது தில்லி: பதவிப் பிரமாணத்துக்கு தமிழக ஆளுநர் மறுப்பு தெரிவித்ததை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், ஆளுநர் என்ன செய்கிறார் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சிக்கு உயா்நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்ததை அடுத்து அவர் எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனால், அமைச்சர் பதவியையும் இழந்தார்.

இந்த நிலையில், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் 11ஆம் தேதி உத்தரவிட்டது. பொன்முடிக்கு மீண்டும் எம்எல்ஏ பதவி வழங்கி தமிழக சட்டப்பேரவை செயலகம் உத்தரவிட்டதை தொடர்ந்து, அவருக்கு மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கக் கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநருக்கு கடந்த வாரம் கடிதம் அனுப்பி இருந்தார்.

முதல்வரின் கடிதத்துக்கு பதிலளிக்காமல் 4 நாள்கள் பயணமாக தில்லி சென்ற ஆளுநர் கடந்த வாரம் சனிக்கிழமை சென்னை திரும்பிய நிலையில், பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்தார்.

இந்த நிலையில், ஆளுநரின் முடிவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, கடந்த 75 ஆண்டுகளில் இதுபோன்ற நடந்தது இல்லை தமிழக அரசு வாதம் முன்வைத்தது. வேண்டுமென்றே கால தாமதம் செய்கிறார். உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி ஆளுநர் செயல்படுவது நீதிமன்ற அவமதிப்பாகும். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, பொன்முடி எம்எல்ஏவாக தொடர்கிறார். அவருக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும். ஆனால், பதவிப் பிரமாணத்தை மறுப்பது போன்ற செயல் கடந்த 75 ஆண்டுகாலத்தில் நடந்தது இல்லை என்று தமிழக அரசு வாதிட்டது.

அப்போது, அமைச்சர் பொறுப்பு வழங்க மறுப்பதை அடிப்படை உரிமை மறுக்கப்படுவதாகக் கூற முடியாது என்று ஆளுநர் தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளுத்தும் வெயிலா? பொழியும் மழையா? தமிழகத்துக்கு மஞ்சள் எச்சரிக்கை

ஓடிடியில் வெளியானது ஆவேஷம்!

சிகாகோவில் பயின்றுவந்த தெலங்கானா மாணவர் மாயம்

இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பதை மோடி உள்ளிட்ட எவராலும் தடுக்க முடியாது: செல்வப்பெருந்தகை

கமல்ஹாசன் பொறாமைப்படும் விஷயம் எது?

SCROLL FOR NEXT