கோப்புப் படம். 
தமிழ்நாடு

விளவங்கோடு இடைத்தேர்தலில் பாஜக சார்பில் வி.எஸ். நந்தினி போட்டி

DIN

விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் வி.எஸ். நந்தினி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது.

விளவங்கோடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த விஜயதரணி, தனது பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடா்ந்து, அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

பேரவைச் செயலகத்தின் பரிந்துரையை ஏற்றுக் கொண்ட தோ்தல் ஆணையம், மக்களவைத் தோ்தல் தேதி அறிவிப்புடன், விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் இடைத் தோ்தலை அறிவித்துள்ளது.

அதன்படி விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஏப். 19-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் வி.எஸ். நந்தினி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக விளவங்கோடு பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக யூ.ராணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பாஜக சார்பிலும் அத்தொகுதிக்கு பெண் வேட்பாளரே நிறுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கல் : போகி பண்டிகைக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை!

புதிய பிரதமர் அலுவலகம் ‘சேவா தீர்த்’ தயார்: 1947-க்கு பின் முதல்முறையாக இடமாற்றம்!

சிறையில் காலமானார் வங்கதேச பாடகர் புரோலாய் சாகி

எச்.சி.எல் 3வது காலாண்டு நிகர லாபம் 11% சரிவு!

உ.பி. அணிக்கு எதிரான போட்டி: ஆர்சிபி பந்து வீச்சு!

SCROLL FOR NEXT