விளவங்கோடு இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.ஜெமினி
விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் நாதக சார்பில் இரா.ஜெமினி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு தொகுதிக்கு ஏப்.19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த விஜயதரணி, பாஜகவில் சோ்ந்ததால் அவா் தனது சட்டப்பேரவை உறுபிப்பினா் பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.
இதனால் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி காலியாக உள்ளதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் இரா.ஜெமினி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் 40 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலும் இன்று வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.