FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

காரைக்குடியில் சீமான் போட்டி! நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்கள் அறிமுகம்!

நாம் தமிழர் கட்சியின் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

Updated On : 21 பிப்ரவரி 2026, 7:23 pm IST
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
பகிர்:

திருச்சியில் நடைபெறும் நாம் தமிழர் கட்சியின் மாநாட்டில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிமுகம் செய்து வைத்தார்.

தமிழ்நாட்டில் பேரவைக்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் பிரசாரம், மக்கள் சந்திப்புக் கூட்டம், மாநாடு எனத் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன.

இந்த நிலையில், திருச்சி மாவட்டம், ஆலம்பட்டிபுதூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று (பிப். 21) ‘மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு’ நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

இந்த மாநாட்டில் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தினார். மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 117 பெண் மற்றும் 117 ஆண் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். 234 தொகுதிகளில் 40 பொறியாளர்கள், 33 வழக்கறிஞர்கள், 15 மருத்துவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

சீமான் தனது சொந்த மாவட்டமான சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி தொகுதியில் களமிறங்கியுள்ளார்.

அவரைத் தவிர்த்து இடும்பாவனம் காா்த்திக், நாகை மாவட்டம் வேதாரண்யம் தொகுதியிலும், திரைப்பட இயக்குநர் களஞ்சியம், ஆயிரம்விளக்கு தொகுதியிலும், வீரப்பன் மகள் வித்யாராணி மேட்டூர் தொகுதியிலும் வேட்பாளர்களாகக் களமிறக்கப்பட்டுள்ளனர்.

கும்மிடிப்பூண்டியில் வழக்குரைஞர் ஸ்ரீதர், பொன்னேரியில் ராஜாத்தி, திருத்தணியில் சந்திரன், திருவள்ளூரில் செந்தில்குமார், பூந்தமல்லியில் மேகலா, ஆவடியில் புனிதா, மதுரவாயல் ரேவதி, அம்பத்தூர் சிலம்பரசன், மாதவரம் ருத்திகா ஏழுமலை, திருவொற்றியூர் சத்யா பாஸ்கர், சென்னை ஆர்.கே. நகரில் வெண்ணிலா தாயுமானவன், பெரம்பூர் வெற்றித்தமிழன், கொளத்தூர் சௌந்திரபாண்டியன், வில்லிவாக்கத்தில் ரோஷிணி, திரு.வி.க. நகர் ஜகதீஷ் சந்தர், எழும்பூர் சரண்யா உள்ளிட்டோர் போட்டியிட உள்ளனர்.

கடந்த மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் அதிகபட்சமாக சிவகங்கை தொகுதியில் 16.81 சதவிகித வாக்குகளை பெற்று அங்கு மட்டுமே நாதக டெபாசிட் பெற்றது. காரைக்குடி சட்டப்பேரவை தொகுதியில் நாதக 14.80 சதவிகித வாக்குகளை பெற்றது. அதனால், சீமான் அங்கு களமிறங்கியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments