மக்களவைத் தேர்தலில் டிடிவி தினகரனுக்கு நன்றிக் கடனாக தேனி தொகுதியை கொடுத்தோம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, தேனி தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிட நானும் என் மகனும் விருப்பம் தெரிவித்தோம். தேனி தொகுதியில் போட்டியிட டிடிவி தினகரனும் ஆசைபட்டதால் அவருக்கு தந்திருக்கிறோம்.
தேனி மக்களவைத் தொகுதியில் டிடிவி தினகரனனை அமோக வெற்றியடைய செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக, திமுக இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
அதிமுக சார்பில் வி.டி நாராயணசாமியும், திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகின்றனர். மேலும் பாஜக கூட்டணியில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிட உள்ளார் என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.