தமிழ்நாடு

அரசியல் கட்சி தலைவர்களுடன் சத்ய பிரதாசாகு ஆலோசனை

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

DIN

சென்னை: மக்களவைத் தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் நிலையில், இதுதொடர்பாக அரசியல் கட்சிகளின் கருத்துகளை கேட்பதற்காக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுடன் சனிக்கிழமை சத்ய பிரதாசாகு ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அங்கீகரிக்கப்பட்ட 10 அரசியல் கட்சி பிரதிநிதிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தல் முன்னேற்பாடுகள், தேர்தல் பிரசாரத்தின் போது அரசியல் கட்சி முன்பற்ற வேண்டிய நடைமுறைகள், இறுதி வாக்காளர் பட்டியலை வேட்பு மனு தாக்கல் இறுதி நாளில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்குவது, பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சத்ய பிரதாசாகு ஆலோசனை நடத்தினார்.

அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேமுதிக, பகுஜன் சமாஜ் கட்சி, தேசிய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேருந்து மீது லாரி மோதியதில் பயணி காயம்

மதுரையில் டிச. 5-இல் ஹாக்கி வீரா்களுக்காக சிறப்பு ஜல்லிக்கட்டு

ஹசீனாவை நாடு கடத்த வேண்டும்: இந்தியாவுக்கு வங்கதேச இடைக்கால அரசு மீண்டும் கடிதம்

மாநகர சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள்: வாகன ஓட்டிகள் அவதி

வெள்ளக்கோவிலில் சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT