சந்திரகாச்சிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்
Updated On : 24 மார்ச், 2024 at 1:20 AM
சென்னை எழும்பூரில் இருந்து சந்திரகாச்சிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை எழும்பூரில் இருந்து மேற்குவங்க மாநிலம் சந்திரகாச்சிக்கு மாா்ச் 30, ஏப்.6 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமை) இரவு 11 மணிக்கு சிறப்பு ரயில் (எண்: 06077) இயக்கப்படும். மறுமாா்க்கமாக சந்திரகாச்சியில் இருந்து சென்னை எழும்பூருக்கு மாா்ச் 25, ஏப்.1, 8 ஆகிய தேதிகளில் (திங்கள்கிழமை) சிறப்பு ரயில் (எண்: 06078) இயக்கப்படும். இந்த ரயில் கூடூா், நெல்லூா், ஓங்கோல், விஜயவாடா, ராஜமுந்திரி, சம்பல்கோட், பாலா்சா, புவனேஷ்வரம், பாலஷோா், காரக்பூா் வழியாக இயக்கப்படும். இதில் 21 முன்பதிவில்லா பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.