தமிழ்நாடு

திமுக அரசு பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியுள்ளது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

DIN

தேனி: திமுக அரசு பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியுள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாத்திட, இந்தியா கூட்டணியின் வெற்றி ஒன்றே இலக்காக கொண்டு ஒவ்வொரு மக்களவை தொகுதியிலும் பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது திமுக கூட்டணி.

அந்த வகையில், தேனி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் தங்க. தமிழ்ச்செல்வனை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,தேனி பங்களாமேடு, பெரியகுளம் நகரில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது, பத்து ஆண்டுகால பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி என்ன செய்தார்? மாறாக, நமது மொழி, நிதி, கல்வி என அனைத்து உரிமைகளையும் மோடி அரசு பறித்துள்ளது.

தமிழ்நாட்டு மாணவர்கள் படிக்கக் கூடாது என்பதற்காகவே புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை தமிழ்நாட்டில் நீட் தேர்வை கொண்டு வரவில்லை.

நீட் தேர்வுக்கு இதுவரை 21 பேர் பலியாகியுள்ளனர். இதற்கு மத்தியில் ஆளும் பாஜக அரசும், அப்போதைய அதிமுக அரசும் தான் காரணம்.

9 ஆண்டு பாஜக அரசு ரூ.7.5 லட்சம் கோடிக்கு கணக்கு காட்டவில்லை.

தமிழ்நாடு அரசு கடும் நிதி நெருக்கடியிலும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

திமுக அரசு பெண்களுக்கு பல்வேறு சலுகைகளை தந்து அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியுள்ளது.

மத்தியில் இந்தியா கூட்டணி அமைந்தால் சமையல் எரிவாயு உருளை விலை ரூ.500 ஆகவும், பெட்ரோல் விலை ரூ.75 ஆகவும் நிர்ணயம் செய்யப்படும் என உதயநிதி தெரிவித்தார்.

மேலும், நாட்டில் பல கட்சியினரை மிரட்டுவது போல், திமுகவினரையும் மிரட்ட நினைக்கிறது மோடி அரசு. ஆனால் நாங்கள் மோடி, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ என எதற்கும் பயப்பட மாட்டோம். இவ்வளவு ஏன், எங்கள் தலைவர் இல்லை, நான் இல்லை, எங்கள் கிளைச் செயலாளர் வீட்டு குழந்தைகள் கூட உங்களுக்கு பயப்படாது.

நம் மொழி உரிமை - கல்வி உரிமை - நிதி உரிமையை மீட்டெடுக்க பாஜகவின் பிடியிலிருந்து இந்தியாவை மீட்போம். ஜனநாயகம் காப்போம் என உதயநிதி பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உங்கள் ஆசை.. என் பொறுப்பு.. ராஜீவ் நினைவில் ராகுல் உருக்கம்

விரைவில் பேருந்து சேவையை தொடங்குகிறது ‘உபெர்’ நிறுவனம்

வாரிசு அரசியலில் ‘இந்தியா’!

மேற்குக் கரையில் 7 பாலஸ்தீனர்கள் பலி!

கடல் சீற்றம்

SCROLL FOR NEXT