துரோகிகளின் கைகளில் இரட்டை இலை சின்னம்: டிடிவி பிரசாரம்
தேனி பெரியகுளத்தில் டிடிவி தினகரன் பிரசாரம்
தேர்தலில் வெற்றி பெறச் செய்தால் உங்களின் சகோதரனாக பணியாற்றுவேன் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளரும் தேனி வேட்பாளருமான டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தேனி பெரியகுளத்தில் பிரசாரம் மேற்கொண்டபோது பேசிய அவர், தேர்தலில் வெற்றி பெறச் செய்தால் உங்களின் சகோதரனாக பணியாற்றுவேன். இரட்டை இலை சின்னம் தற்போது துரோகிகளின் கைகளில் சிக்கியுள்ளது. விரைவில் அது உரியவர்களிடம் திரும்பும்.
காங்கிரஸ் யார் என்பது மக்களுக்குத் தெரிந்துவிட்டது. மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளில் கூட காங்கிரஸ் கட்சி வெற்றி பெறாது. அதனால், நரேந்திர மோடிதான் மீண்டும் பிரதமராவார் எனக் குறிப்பிட்டார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.