தேர்தலில் விஜய்யால் தி.மு.க கூட்டணிக்குதான் பாதிப்பு ஏற்படும் என்று அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
கும்பகோணத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெகவால் பல அரசியல் கட்சிகளுக்கு பாதிப்பு இருக்கும். இது 2006ல் விஜயகாந்த் வருகையால் ஏற்பட்ட பாதிப்பைவிட அதிகமாகவே இருக்கும். இது திமுக கூட்டணிக்கு மிகப் பெரிய பாதிப்பாகவும், அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு சாதகமாகவும் அமையும். அதனால்தான் நான் விஜய்யை வரவேற்கிறேன்.
தமிழகம் தற்போது போதை வஸ்துக்களின் சர்வதேச சந்தையாகவும், சர்வதேச துறைமுகமாகவும் மாறிவிட்டது. பள்ளி மாணவனிடன் போதைப் பொருள் இருக்கிறது. காவல்துறையினரே போதை விற்பனை செய்கின்றனர். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நாங்கள் தனித்துப் போட்டியிட்டதால், அது திமுகவிற்கு சாதகமாக போனது. இம்முறை அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி அமமுக இணைந்துள்ளதால் அந்த வாய்ப்பு திமுகவிற்கு கிடைக்காது.
எனவே, வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் என்டிஏ கூட்டணி அதிமுக தலைமையில், 200 இடங்களில் வெற்றி பெற்று அம்மாவின் ஆட்சி அமையும். கடந்த 10 ஆண்டுகளாக திமுக கூட்டணி ஒற்றுமையாக இருப்பது போல் வெளியில் காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகி வருகிறது. கொள்கைக் கூட்டணி கொள்கைக் கூட்டணி என்கிறார்கள்.
கொள்கை ஒன்றாக இருந்தால் அவர்களுக்குத் தனித்தனி கட்சித் தேவை இல்லை. காங்கிரஸை எதிர்த்துதான் திமுக உருவாக்கப்பட்டது. அதுபோல் கேரளத்தில் கம்யூனிஸ்டும் காங்கிரஸும் நேரடி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, இவர்களுக்குள் ஒற்றுமை என்பது இல்லை என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.