தமிழ்நாடு

பாஜகவுக்கு வாக்களிப்பது அவமானம்: மு.க. ஸ்டாலின் பிரசாரம்

DIN

பாஜகவுக்கு வாக்களிப்பது எதிர்கால சந்ததியினருக்கு செய்யும் துரோகம் என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் வேட்பாளர்களை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்துக்கு திமுக கொண்டுவந்த திட்டங்களை பட்டியலிட்டுப் பேசினார்.

ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் திமுகவின் தேர்தல் அறிக்கை வழங்கியுள்ளோம். திருச்சி பொதுக்கூட்டத்தில் மோடி மீது எந்தவொரு விமர்சனத்தையும் எடப்பாடி பழனிசாமி வைக்கவில்லை.

சிறுபான்மையினருக்கு எதிரான திட்டங்கள் அனைத்தும் இந்தியா கூட்டணியின் ஆட்சி அமைந்ததும் நீக்கப்படும். பாஜகவுக்கு வாக்களிப்பது அவமானம். தமிழகத்திற்கு 10 ஆண்டுகளில் ஏதேனும் சிறப்பு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றி இருக்கிறாரா?

வெள்ள நிவாரணத்துக்கு நிதி கேட்டால் ஏளனம் செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். நிவாரண நிதி கேட்டால், பிச்சை என்று மத்திய நிதி ஆமைச்சர் ஆணவத்துடன் ஏளனம் செய்கிறார். மற்றொரு மத்திய அமைச்சர் தமிழர்களை தீவிரவாதியாக சித்தரித்து பேசுகிறார்.

நிதி கேட்டும் நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலையே உள்ளது. பாஜக அரசு ஓரவஞ்சனையுடன் செயல்படுகிறது. மோடி அரசின் ஒரே நாடு, ஒரே தேர்தல் என பல்வேறு ஒரே திட்டங்களால் ஒருவர்தான் பயனடைகிறார்.

கடந்த 3 ஆண்டு கால ஆட்சியில் பல திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றி இருக்கிறது.

பாஜகவுக்கு வாக்களிப்பது அவமானம் என்று வாக்காளர்களிடம் எடுத்துரைக்க வேண்டும்.

பாஜகவுக்கு வாக்களிப்பது எதிர்கால சந்ததியினருக்கு செய்யும் துரோகம் என்பதை விளக்க வேண்டும். தமிழர்களுக்கும் தமிழ் இனத்துக்கும் எதிரான கட்சி பாஜக எனக் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது ‘ஹிட் லிஸ்ட்’ பட டிரைலர்

ஆல்ரவுண்டர்களைக் காட்டிலும் பந்துவீச்சாளர்களை பாதிக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி: ஷாபாஸ் அகமது

தில்லியின் சுற்றுச்சூழல் பாதிப்பைச் சீர்செய்வதே இந்தியா கூட்டணியின் முதன்மையான நோக்கம் : ஜெய்ராம் ரமேஷ்

4 மாவட்டங்களில் தயார் நிலையில் பேரிடர் மீட்புக்குழு

மெளனி ராய் தருணங்கள்!

SCROLL FOR NEXT