தமிழ்நாடு

விஜய பிரபாகரன் எனக்கு மகன் மாதிரி: ராதிகா

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் குறித்து பாஜக வேட்பாளர் கருத்து.

DIN

விருதுநகர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் தனக்கு மகன் மாதிரி என்று பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற 19ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விருதுநகர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸின் மாணிக்கம் தாகூர், அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில், விருதுநகரின் பிரசாரத்தில் ஈடுபட்ட ராதிகா சரத்குமார் செய்தியாளர்களுடன் பேசியதாவது:

“விருதுநகர் தொகுதி நாங்கள் கேட்டு கொடுக்கப்பட்டதில்லை. பாஜக தலைமை போட்டியிட சொன்னது. இந்த தொகுதி எங்களுக்கு புதியதில்லை, ஏற்கெனவே பலமுறை பிரசாரத்திற்காக வந்துள்ளோம்.

விஜய பிரபாகரன் எனது மகளுடன் படித்தவர். எனக்கும் மகன் போன்றவர். அவர் நலமுடன் இருக்க வேண்டும், வேறெதுவும் சொல்ல விரும்பவில்லை.

காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் தொகுதிக்கு பெரிதாக வந்து மக்களை சந்தித்தது இல்லை என்ற புகார் உள்ளது.” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT