தூத்துக்குடி: மக்களவை பொதுத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிடுகின்ற ஆர். சிவசாமி வேலுமணி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கோ.லட்சுமிபதியிடம் வேட்புமனுவை வழங்கினார்.
இந்நிகழ்வில், அதிமுக மாவட்ட செயலர்களும், முன்னாள் அமைச்சர்களுமான எஸ்.பி. சண்முகநாதன், கடம்பூர் செ. ராஜு எம்எல்ஏ, மாநில வர்த்தகர் அணி செயலர் சி.த. செல்ல பாண்டியன், அமைப்பு செயலர் என். சின்னத்துரை ஆகியோர் உடன் இருந்தனர்.
அதிமுக வேட்பாளர் ஆர். சிவசாமி வேலுமணிக்கு மாற்று வேட்பாளராக அவரது மனைவி ஆனந்தி பிரபா வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.