கோப்புப்படம்
கோப்புப்படம் 
தமிழ்நாடு

2 தொகுதிகளில் போட்டியிட்டால் பம்பரம் சின்னம்: தேர்தல் ஆணையம்

DIN

2014-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டதுபோல, வரும் மக்களவைத் தேர்தலிலும் பம்பரம் சின்னத்தை ஒதுக்கக் கோரி உயா்நீதிமன்றத்தில் வைகோ வழக்கு தொடர்ந்திருந்தார்.

பம்பரம் சின்னத்தை ஒதுக்கத் தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய மதிமுகவின் மனு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இந்த நிலையில், சட்டப்படி 2 தொகுதிகளில் போட்டியிடும் பட்சத்தில் பம்பரம் சின்னம் ஒதுக்கப்படும் என்றும், பம்பரம் சின்னம் ஒதுக்கக்கோரிய மதிமுகவின் கோரிக்கை இன்றே பரிசீலிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

மேலும், அங்கீகரிக்கப்படாத கட்சி 2 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் ஒரே சின்னம் வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பம்பரம் பொதுச்சின்னத்திற்கான பட்டியலில் உள்ளதா என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இவ்வழக்கின் மீதான விசாரணையை இன்று பிற்பகல் 2.15 மணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நம்பிக்கையின் வானவில்...!

திட்டக்குடி அருகே கார் டயர் வெடித்து கார் விபத்து: 3 பேர் பலி

அமித் ஷாவை பிரதமராக்கவே மோடி பிரசாரம்: கேஜரிவால் பேச்சு

வாக்குகளை அள்ளிய காங். வறுமையை ஒழிக்கவில்லை: நயாப் சைனி

அகிலேஷ் யாதவால் இந்தியா - பாக். போட்டியாக மாறிய கன்னௌஜ்!

SCROLL FOR NEXT