தமிழ்நாடு

மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு திரும்பப் பெறும் அவகாசம் நிறைவு

DIN

மக்களவை தேர்தல்யொட்டி தமிழகத்தில் வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைந்துள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய மாா்ச் 27-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. மொத்தமாக 1,749 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. வேட்புமனுக்கள் மீது வியாழக்கிழமை பரிசீலனை நடைபெற்றது. இதில் போதிய ஆவணங்களை இணைக்காத 664 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 1,085 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

வேட்புமனுக்களைத் திரும்பப் பெற சனிக்கிழமை மாலை வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை தினம் என்பதால், வேட்புமனுக்கள் திரும்பப் பெறப்படவில்லை. ஒரே வேட்பாளா் ஒன்றுக்கு மேற்பட்ட மனுக்கள் வரை தாக்கல் செய்திருந்தால் அவற்றில் தேவையில்லாத மனுக்கள் திரும்பப் பெறப்படும். இதனால், வேட்புமனுக்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் கீழே இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைந்தது. 3 மணி நிலவரப்படி தேர்தல் ஆணைய இணைய தளத்தில் தெரிவித்திருக்கும் தகவலின்படி 1,090 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். களத்தில் ஆண் வேட்பாளர்கள் 973 பேர், பெண் வேட்பாளர்கள் 117 பேர் உள்ளனர். 50 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்கக்கோரி ரயில் மறியல்!

கடும் பனிமூட்டம்.. கிராமத்தில் அவசரமாக தரையிறங்கிய ஹெலிகாப்டர்!

மறுஒளிபரப்பாகும் தொடர்கள் டிஆர்பி பெறுகின்றனவா?

தண்ணீர் நிரம்பிய சுரங்கப்பாதைக்குள் சிக்கிக்கொண்ட கார்! பத்திரமாக மீட்ட பொதுமக்கள்!

“EPS பேசியது மனவருத்தமளிக்கிறது!” ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வேதனை! | ADMK

SCROLL FOR NEXT