முகப்பு
தமிழ்நாடு

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி 118 வயது மிட்டாய் தாத்தா விழிப்புணர்வு

Updated On : 31 மார்ச், 2024 at 7:37 AM
பகிர்:

மக்களவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி தஞ்சாவூரில் 118 வயது மிட்டாய் தாத்தா விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

வரும் மக்களவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும், ஓட்டுக்காக பணம் பெறக்கூடாது,

வாக்கை வீணாக்காமல் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி தஞ்சாவூர் அரசு ஐடிஐ மைதானத்தில் மிட்டாய் தாத்தா என்று அழைக்கப்படும் 118 வயதான முகமது அபுசாலி என்பவர் விழிப்புணர்வு பதாகைகள் கட்டிய ஆட்டோக்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Advertisement

முன்னதாக ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் வாக்காளர்களுக்கு தான் தயாரித்த இனிப்பு பலகாரங்களை வழங்கி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் அவர் வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments