கோப்புப்படம் 
தமிழ்நாடு

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.1,911.

DIN

சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டரின் விலை ரூ.19 குறைக்கப்பட்டு ரூ.1,911-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கச்சா எண்ணெய் விலை உயரும்போது சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வது பொதுவானது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு உருளையின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன.

இதன்படி, நிகழாண்டு மே மாதத்திற்கான எரிவாயு உருளையின் விலை இன்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.19 குறைக்கப்பட்டு, இன்று முதல் ரூ.1,911-க்கு விற்பனையாகிறது.

தில்லியில் வணிக சிலிண்டரின் விலை ரூ.1,745.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த மாதமும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.30.50 குறைந்தது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு உருளையின் விலையில் மாற்றமின்றி, ஒரு உருளை ரூ.818.50க்கு விற்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடர்ந்து 4-வது நாளாக ஏற்றத்தில் பங்குச் சந்தை! மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!!

தங்கம் விலை அதிரடியாக உயர்வு! எவ்வளவு?

2,833 காவலர்கள் பணிக்கான தேர்வு தேதி அறிவிப்பு!

தவெக மாநாடு: பணியில் 200 செவிலியர்கள் உள்பட 600 மருத்துவக் குழுவினர்!

பக்தா்கள் பணத்தில் மட்டுமே கோயில் திருப்பணிகள் நடைபெறுகின்றன: இந்து முன்னணி

SCROLL FOR NEXT