தமிழ்நாடு

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று உண்டு என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

DIN

கடந்த ஆண்டில் இல்லாத அளவில் மிக மோசமான வெப்ப அலை வீசிய மாதமாக ஏப்ரல் மாதம் இருந்ததோடு, இதுவரை இல்லாத வகையில் வெப்பநிலை பதிவான ஆண்டாகவும் 2024-ஆம் ஆண்டு உருவெடுத்துள்ளது.

இதே நிலை மே மாதத்திலும் தொடர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது.

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று உண்டு. நுங்கம்பாக்கத்தில் இன்று வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் பதிவாகும். மீனம்பாக்கத்தில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகுவதற்கான சாத்தியம் மிகக்குறைவு.

காற்றில் வெப்பநிலை அதிகமாக உள்ளதால், வெப்பநிலை அதிகமாக உணரப்படும். தமிழகத்தின் உள்புறப் பகுதிகளுக்கு வானிலை முன்னறிவிப்பில் எவ்வித மாற்றமும் இல்லை.

வேலூர், கரூர், திருச்சி, சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் வெப்ப நிலை அதிகமாக பதிவாகும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி போதைப் பொருள் பறிமுதல்

பாகிஸ்தானைத் தாக்கினால் செளதி களமிறங்கும்! உடன்பாடு கையொப்பம்!

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

மும்பையில் பிரபல பள்ளியில் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: பெண் ஊழியர் கைது

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

SCROLL FOR NEXT