தமிழ்நாடு

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

எல்-நினோ காலகட்டத்தில் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு இருந்ததால் வெப்பம் அதிகரித்துள்ளது.

DIN

தமிழகத்தில் வரும் 6-ஆம் தேதி வரை உள் மாவட்டங்களில் வெப்ப அலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னையில் இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் பேட்டியளித்தார்.

தமிழகத்தில் அடுத்த மூன்று நாள்கள் மே 6 வரை வெப்ப அலை வீசும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் இயல்பைவிட அதிகமாக இருக்கக்கூடும் என்றும் தெரிவித்தார்.

அதேபோன்று வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 - 5 டிகிரி செல்சியஸ் இயல்பை விட மிக அதிகமாக இருக்கக்கூடும்.

நாளை(மே 4) முதல் அக்னி வெயில் தொடங்க உள்ள நிலையில் முதல் 7 நாள்கள் அதிக வெப்பநிலை நிலவும். அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 41 - 4 2 டிகிரி செல்சியஸும், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் 39-40 டிகிரி செல்சியஸ், கடலோர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 36 - 39 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும்.

வெப்ப அலைக்கு காலநிலை மாற்றம் மட்டுமே காரணம் இல்லை, கோடை மழை குறைந்ததால் வெப்பநிலை அதிகரித்துள்ளது.

எல்-நினோ காலகட்டத்தில் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு இருந்ததால் வெப்பம் அதிகரித்துள்ளது. ஏப்ரல் தொடங்கி 27 நாள்கள் ஈரோட்டில் தொடர்ந்து 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பம் பதிவாகியுள்ளது.

இதுவரை இல்லாத அளவில் இந்தாண்டு வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. கோடை மழை பெய்யும்போது வெப்பத்தின் தாக்கல் குறைய வாய்ப்புள்ளது.

கரூர், ஈரோடு உள்ளிட்ட 10 இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 42 முதல் 44 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் தர்மபுரி, ஈரோடு, கரூர் மற்றும் நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 - 42 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

சென்னை மீனம்பாக்கத்தில் 40 டிகிரியும், நுங்கம்பாக்கத்தில் 37.9 டிகிரியும் பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது.

பாலக்கோடு (தர்மபுரி), மாரண்டஹள்ளி, பாரூர்(கிருண்ணகிரி), மேலாலத்தூர் (வேலூர்), பையூர் (கிருஷ்ணகிரி) ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளது.

மேலும், அடுத்த 5 நாள்களில் உள்மாவட்டங்களில் கோடை மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் மே 7ல் நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெரூசலேமில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு! 5 பேர் பலி!

பாஜகவிலிருந்து விலகிய புதுச்சேரி முன்னாள் தலைவர்!

ஜிஎஸ்டி குறைப்பு: ராயல் என்ஃபீல்டு பைக்குகள் விலையில் மாற்றம்!

ஓடிடியில் கவனம் பெறும் பன் பட்டர் ஜாம்!

தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி!

SCROLL FOR NEXT