கே.பி. ஜெயக்குமார்  
தமிழ்நாடு

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

ஜெயக்குமாரின் உடல் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு பிரேதபரிசோதனை நடைபெற்றது.

DIN

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கே.பி. ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2 ஆம் தேதி இரவு மாயமான கே.பி. ஜெயக்குமார், அதன்பின், வீடு திரும்பவில்லை என அவரது மகன் உவரி காவல் நிலையத்தில் புகாரளித்திருந்த நிலையில், ஜெயக்குமாரின் மகன் அளித்த புகாரின் பேரில், உவரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிந்து, காணாமல் போன, ஜெயக்குமாரை அதிகாரிகள் தேடி வந்தனர்.

இதனிடையே, தனக்கு கொலை மிரட்டல் வருவதாக கடந்த மாதம் ஜெயக்குமார் போலீசில் புகார் அளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், திசையன்விளை அருகே உள்ள கரைசுத்து புதூர் பகுதியில் உள்ள தோட்டத்தில், இன்று(மே. 4) ஜெயக்குமாரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதி எரிந்த நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டிருப்பது, அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காணாமல் போன ஜெயக்குமாரின் பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் சம்பவ இடத்திலிருந்து கிடைத்திருப்பதாகவும், அதனைக் கொண்டு, ’ஜெயக்குமாரின் உடல் இது’ என்ற முடிவுக்கு காவல்துறையினர் வந்துள்ளனர். இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற தடயவியல் நிபுணர்கள் அப்பகுதியில் சோதனை நடத்தினர்.

முன் விரோதத்தால் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், ஜெயக்குமாரின் உடல், பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு உடற்கூராய்வு நடைபெற்றது. அதன் முடிவுகள் வெளியான பின், அவரது மரண வழக்கில் மேற்கொண்டு விசாரணை முடுக்கி விடப்படுமென காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று ஜிப்மா் சிறப்பு மருத்துவ முகாம்

உள்ளாட்சி ஊழியா்கள் செப். 8 முதல் பணிக்குத் திரும்ப முடிவு

காவல் நிலையத்தில் இன்று குறைகேட்பு முகாம்

அம்பேத்கா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசு கல்வி நிறுவன மாணவா்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT