கோப்புப்படம் 
தமிழ்நாடு

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பதிவிட்டுள்ளார்.

DIN

கத்திரி வெயில் சனிக்கிழமை தொடங்கிய நிலையில், தமிழகத்தில் 17 இடங்களில் நேற்று (மே. 4) வெயில் அளவு 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து பதிவானது.

மேலும், ஞாயிற்றுக்கிழமை (மே 5) வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட மிக 5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். மேலும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசும் என்று சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், தனியார் வானிலை ஆர்வலர் தமிழ்நாடு வெதர்மேன் இன்றைய வானிலை குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், "மீனம்பாக்கத்தில் இன்று(மே. 5) 106 டிகிரி ஃபாரன்ஹீட்டை எட்டும். சேலம் ஏற்காடு, வால்பாறை, கொடைக்கானல், தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை பகுதிகளில் முதலிடத்தில் இருந்த கரூரில் மழை பெய்ய 50 சதவிகிதம் வாய்ப்புள்ளது. ஈரோடு அல்லது கரூரை விட வேலூரில் அதிகபட்ச வெப்ப நிலை இன்று பதிவாகலாம்." என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

80'ஸ் ரீயூனியன்!

தமிழ்நாட்டில் அக். 11 வரை மழைக்கு வாய்ப்பு!

அடைமழையால் கடும் வெள்ளம்! அடித்துச்செல்லப்பட்ட கார்கள்!

சேட்டன் ஆன் தி வே... சௌபின் சாஹிர்!

SCROLL FOR NEXT