தமிழ்நாடு

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

DIN

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களும் 90 சதவிதத்துக்கு மேல் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்கத்தில் அரசு தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டார். அதில், தேர்வெழுதியவர்களில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதில், திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களில் 97.45 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளனர். சிவகங்கை மற்றும் ஈரோடு மாவட்டங்கள் 97.42 சதவிகிதம் தேர்ச்சியுடம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர்.

தமிழகத்தில் 396 அரசுப் பள்ளிகள் உள்பட 2,478 பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

மாவட்ட வாரியான தேர்ச்சி பட்டியலில் 90.47 சதவிகிதம் பெற்று திருவண்ணாமலை கடைசி இடம் பிடித்துள்ளது.

கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி பெற்றவர் சதவிகிதம் அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் தொடக்கம்!

அட்லி - சல்மான் கான் கூட்டணி?

மேற்கு வங்க ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம்!

வேகக் கட்டுப்பாட்டை மீறும் ரயில் ஓட்டுநர்கள்: குழு அமைத்து விசாரிக்கும் ரயில்வே!

மக்களின் நம்பிக்கையை பெற்ற நிறுவனம் ஆவின்: தமிழ்நாடு அரசு

SCROLL FOR NEXT